பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198 ♦ நான் கண்ட பெரியவர்கள்


நாளை இதே நேரத்திற்கு இதே பயணச்சீட்டுக்களுடன் பயணிகள் வரலாம்” என்று கூறிவிட்டு விமானத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தார்கள். தெ.பொ.மீயும், மகாதேவனும் கீழிறங்கினார்கள். அமைச்சர் நடேசனுக்குப் பெரிய ஆனந்தம், மகாதேவனுக்கு வருத்தம். வழக்கம்போல் அன்று மாலை சுவாமிகளைக் காணச் சென்றோம். சுவாமிகள் சிரித்துக்கொண்டே, “என்னடா மகாதேவா! இறக்கையை விரித்துப் பறக்கவில்லையோ!” என்றார்கள். மகாதேவன் அவர்கள் கண்ணீர் ததும்ப விழுந்து வணங்கிவிட்டுத் தாம் அவசரப்பட்ட காரணம் கூறினார். “அன்று சென்னை போயிருந்தால் நான் இரவு டில்லி சென்று T.W.A. விமானம் மூலம் ஹவாய்த் தீவில் (Hawaii Island) உள்ள ஆனலூலுவுக்குச் (Honolulu) செல்ல வேண்டும். அதற்கு மறுநாள் அங்கு நடைபெறப்போகும் அகில உலக வேதாந்த மகாநாட்டிற்கு நான் தலைமை வகிக்க வேண்டும். எல்லாம் கெட்டுவிட்டது” என்று வருந்தினார். அதைக் கேட்ட சுவாமிகள், “கவலைவேண்டாம் மகனே, இம் மகாநாட்டைப் பதினைந்து நாள் தள்ளிப் போட்டுவிட்டார்கள். நீ அமைதியாகச் சென்று தலைமை ஏற்று நடத்தலாம்” என்று கூறினார்கள். சுவாமிகளிடம் விடை பெற்றுவந்து, நடேசன் வீட்டில் தங்கியபோது மகாதேவன் கூறிய வார்த்தைகள் அவர் துயரத்தை எடுத்துக் காட்டின. “இந்த மகாநாடுகள், ஒரு வருஷத்திற்குமுன்பே அட்டவணை போட்டுத் தயாரிக்கப்பட்டவை யாகும். உலகம் முழுவதிலிருந்தும் பலர் வருவார்கள். ஆகையால் இரண்டு நாள் முன்னர் அதை மாற்றுவது இயலாத காரியம்” என்று கூறி வருந்தினார். மறுநாள் அவர்கள் இருவரும் சென்னை சென்றனர். நான் கொழும்பு சென்று பதினைந்து நாட்கள் தங்கிவிட்டுச் சென்னை வந்து ஒரு மாதம் கழிந்தபின் டாக்டர் மகாதேவனைச் சந்தித்தேன். நாத்தழுதழுக்க, ”சுவாமிகள்