பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் காணும் இளையர் ♦ 225



சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் முதலியவற்றில் பெரிதும் ஈடுபட்டுப் பயின்று சிறந்த நூல்களை உருவாக்கியவர் முனைவர் மா. ரா. போ. குருசாமி அவர்கள்.

இடைக்கால பக்தி இலக்கியங்களில் ஈடுபட்டு ஆழ்வார்களின் பாடல்களில் தோய்ந்து கம்பனிலும் இளங்கோவிலும் ஆழங்காற்பட்டு நூல்களை எழுதியவர் பேராசிரியர் அ. ரா. இந்திரா அவர்கள்.

தமிழ்ப் பேராசிரியராய் இருந்துகொண்டே வடமொழி கற்று வியாக்கியானங்களில் ஈடுபட்டு அவற்றுள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்து சிறந்த நூல்கள் பலவற்றை எழுதியதோடு மிகச்சிறந்த பேச்சாளராகவும் விளங்குபவர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்.

அடக்கமே உருவானவர்; தமிழ்ப் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றவர்; திருமந்திரத்திற்கு உரைகண்டு மூன்று தொகுதிகளாக வெளியிட்டவர் முனைவர் சுப. அண்ணாமலை அவர்கள்.

கல்லூரி பேராசிரியராய் இருந்து ஓய்வுபெற்று, மகான் பாம்பன் சுவாமிகள் நூல்களில் ஆழங்காற்பட்டு அவரையே குருவாகவும் கொண்டு பல நூல்களை எழுதிய பேச்சாளர் முனைவர் ப. இராமன் அவர்கள்.

மேடைப்பேச்சில் ஆர்வம் காட்டாவிடினும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிகளிலும் பெரும் புலமை பெற்று, தொல்காப்பியத்தைக்கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் பேராற்றல் உடையவர், தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகப்பல நூல்களை யாத்துள்ளார் முனைவர் அ. மணவாளன் அவர்கள்.

தமிழ்த் துறையில் பட்டம் பெற்றாலும் பல்வேறுபட்ட பணிகளில் ஈடுபட்டு பல இடங்களில் பணிபுரிந்தாலும்