பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226 ♦ நான் கண்ட பெரியவர்கள்


தமிழையும் சைவ சித்தாந்தத்தையும் மறவாமல் மேடைகளிற் பேசுவதோடு பல நூல்களை யாத்துள்ளவர் முனைவர் டி. பி. சித்தலிங்கையா அவர்கள்.

தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர், மிகச்சிறந்த பேச்சாளர், ஆய்வு நூல்கள் பல எழுதியுள்ளவர் முனைவர் இரா. செல்வகணபதி அவர்கள்.

தமிழ்ப் பேராசிரியராகப் பணி தொடங்கி, கல்லூரி முதல்வராய் முன்னேறி ஓய்வு பெற்றவர். வள்ளலார் பெருமானிடம் மிகப்பெரும் ஈடுபாடுகொண்டவர். தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து பட்டிதொட்டிகளிலும்கூட தம்முடைய சிறந்த பேச்சு வன்மையால் மக்களைத் தம்பால் ஈர்க்கும் பேராற்றல் படைத்தவர் முனைவர் சோ. சத்தியசீலன் அவர்கள்.

அடுத்து வருபவர் முனைவர் அ. அறிவொளி அவர்கள். இவர் மேலே கூறியவற்றோடு அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் பயின்று பலருக்கு நோய் தீர்த்துள்ளார். சக்தி வழிபாட்டில் ஈடுபட்டு சக்தி உபாசகராக இருக்கும் இவர் யோகம் முதலிய கலைகளையும் பயின்றுள்ளார். ஆழமான தம் புலமையை வெளிப்படுத்தும்பொழுது ஒப்பற்ற நகைச்சுவையோடு பேசுபவர் முனைவர் அ. அறிவொளி அவர்கள்.

தமிழகத்தின் பல மேடைகளில் தோன்றி, அரிய தம் சோல்லாற்றலால் கேட்டார்ப் பிணிக்கும் முறையில் பேசுபவர் புலவர் திருமதி காந்திமதி அவர்கள்.

பெரும்புலவர் ஒருவரின் மகனாய்ப் பிறந்து, கல்லூரியில் தமிழ்த் துறையில் பணி புரிந்து கொண்டிருக்கும்பொழுதே பல நாடுகளுக்கும் சென்று சைவசமயத்தின் சிறப்புகளை