பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் காணும் இளையர் ♦ 231


என்ற ஐயம் ஏற்படும் வகையில் பேசுகிறார் இவர்தான் டாக்டர். சுதா சேஷையன் அவர்கள்.

படிப்போ பொறியாளர் படிப்பு; பணியோ பொறியாளர் பணி. ஓய்ந்த நேரமெல்லாம் திருக்கோயிற்பணி. திருமுறைகளில் முழு ஈடுபாடு. பேசத் தொடங்கினால் கேட்பவர் மூக்கின்மேல் விரலை வைப்பர். இவரே பொறியாளர் கே. சிவகுமார் அவர்கள்.

வழக்குறைஞர் தொழில்; கல்வியோ சட்டப்படிப்பு, மிகச்சிறந்த பேச்சாளராகிய இவர், இலக்கியச் சொற்பொழிவு என்று காலடி எடுத்துவைத்தது கம்பன் கழகத்தில் ஆகும். ஆனால் இன்று இவர் போகாத ஊரோ ஏறாத மேடையோ தமிழகத்தில் எங்கும் இல்லை. நூல்களும் பல எழுதியுள்ளார். இவர்தான் த. இராமலிங்கம் அவர்கள்.

திருக்கடையூர் அன்னை அபிராமியின் அருளைப் பெற்ற பரம்பரை. வணிக நிறுவனத்தில் பணி. தமிழகத்திலுள்ள பல ஊர்களில் பட்டி மண்டபம், கவி அரங்கம், இலக்கிய சொற்பொழிவுகள் ஆகிய அனைத்தையும் விடாது செய்பவர். பரம்பரைக்கு ஏற்ற முறையில் கோவையை அடுத்துள்ள தியானலிங்கத்தில் எல்லையற்ற ஈடுபாடு. இவரே மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்.

இன்றைய தமிழ்ப் பேச்சாளர்களில் புதிய சிந்தனைகளைப் புகுத்தி, மனத்தில் பட்டதை அஞ்சாமல் வெளியிடும் சிறந்த பேச்சாளர் சுகிசிவம் அவர்கள்.

தனித்தமிழ் பயிலத் தொடங்கி, பின்னர் ஆங்கிலமும் சிறந்த முறையில் பயின்று மொழியியல் துறையில் சிறந்த புலமை பெற்றுத் துறைத் தலைவராக விளங்குபவர் இவர் பல பிரச்சினைகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் சென்னைப்

16