பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242 ♦ நான் கண்ட பெரியவர்கள்


பிள்ளையவர்கள் வானொலிக்கு வர ஒத்துக்கொண்டது ஆகியவற்றைச் சொல்லிப் “பிள்ளையவர்கள் இசைவிற்குக் காரணமாக இருந்த நாடகத் தயாரிப்பாளர் அ.ச.ஞா. உங்களையும் வானொலிக்கு அழைக்க வந்துள்ளார். எங்கள்மேல்தான் உங்களுக்குக் கோபமே தவிரப் புதிதாக வானொலியிற் சேர்ந்துள்ள அ.ச.ஞா. அழைக்கும் பொழுது நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்று இவ்வளவையும் ஒரே மூச்சிற் சொல்லி முடித்தார்.

ஒரு நிமிஷம் மெளனமாகவிருந்த கலைவாணர் “சரி வருகிறேன். எப்பொழுது வரவேண்டும்?” என்று கேட்டார். “அடுத்து வரப்போகின்ற தமிழ் வருஷப் பிறப்பிற்குப் பார்வையாளர் முன்னிலையில் கலைவாணர் அவர்கள் ஒரு மணிநேரம் ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டும்” என்று திரு சங்கரன் சொன்னதும், கலைவாணர் உடனே ஏற்றுக் கொண்டார். மிக்க மகிழ்ச்சியோடு நாங்கள் நிலையம் திரும்பினோம்.

நிலைய இயக்குநரிடம் பேசும்பொழுதுதான் அவர்கள் இருவருக்கும் அச்சம் பிடித்துக்கொண்டது. கலைவாணர் என்ன பேசுவாரென்று சொல்ல முடியாது. வடவேங்கடத்தை ஆந்திரரும் தென் குமரியைக் கேரளத்தாரும் வலுவாக உரிமை கொண்டாடிய நேரமது, இந்த நிலையில் மத்திய அரசுக்குச் சங்கடம் கொடுக்கக்கூடிய நிலையில் கலைவாணர் பேசிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் நிலைய இயக்குநரையும், துணை இயக்குநரையும் பற்றிக்கொண்டது. மாபெரும் கலைஞராகிய கலைவாணரிடம் சென்று இதுபற்றிப் பேசவேண்டாம் என்று சொல்வதும் பொருத்தமற்றது ஆகும். எனவே, ஒருமுடிவிற்கு வந்தோம்.

புதிதாகப் பதவியேற்றுக்கொண்டிருந்த நான் கலைவாணர் என்ன பேசப்போகிறார் என்பதை எழுதி அனுப்புமாறு அவரை வேண்டிக்கொள்வது என்ற