பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


6. பண்டிதர் நாவலர்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்


தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவேரி என்ற ஊரிற் பிறந்த பண்டித நாவலர் ந. மு. வே. நாட்டார் ஐயா அவர்களின் பெயர் தமிழ் அறிஞர்களிடையே மிக நன்கு தெரியப்பட்ட பெயராகும். நல்ல உயரம், அமைதியான முகம் இவற்றையுடைய இப்பெருமகனார், தமிழிலக்கிய உலகில் மிகப் பிரசித்தி பெற்றவர்களுள் ஒருவராவார்.

திருச்சியிலிருந்த பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார்கள் இப்பெரியார். தந்தையாருக்கு மிக நெருங்கிய நண்பர் ஆதலால் 1924 முதலே ஐயா அவர்களை நன்கு அறிவேன். அக்காலத்தில் ஆஸ்த்மா நோயினால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய மகன் நடராசனும் நானும் சமவயதுடையவர்கள்; ஆதலால், ஒன்றாகவே சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தோம். இப்பொழுது ஒரு பழைய நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது.

திருச்சி மலைக்கோட்டை தெற்குத் தெருவில் தாயுமானவ சுவாமிகள் மடத்தின் எதிரே ஐயா அவர்களின் வீடு இருந்தது. அந்தத் தெருவே பதினைந்து அடி அகலமுள்ள தெருதான். வீட்டின் முகப்பில் வாசற்படியின் எதிரே சாய்வு நாற்காலியில் அமர்ந்து, ஐயா அவர்கள் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்கள். நானும் நடராசனும் எதிர்வீட்டுத் திண்ணையில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு சீனாக்காரன் கலர்க் காகிதங்களில் விசிறி முதலான பொம்மைகளைச் செய்து, அவற்றை விற்றுக்கொண்டு வந்தான். எதிர்த் திண்ணையில்