பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54 ♦ நான் கண்ட பெரியவர்கள்


இயங்கியதால் தலைவரை மன்றத் தலைவர் (Speaker) என்று கூறுவது வழக்கம். நான் போட்டியிட்டபோது அது ஒரு வரலாற்றுப் புதுமையாக ஆகிவிட்டது. ‘தமிழ்த்துறையில் பயிலும் ஒருவன் ஸ்பீக்கர் (Speaker) பதவிக்குப் போட்டியிடுகிறானாம்’ என்று எங்கும் ஒரே பேச்சு.

தேர்தல் முடிந்து, வெற்றியும் பெற்றுவிட்டேன். அக் காலகட்டத்தில் நான் முழுதும் ‘பொதுவுடைமைவாதி’ (Communist), என் உறவினனும் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மிகச் சிறந்த பேச்சாளனுமாகிய திரு. கே. பாலதண்டாயுதம், திரு. எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் எனக்கு இரண்டாண்டுகள் பின்னர் வந்து படித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் இருவரும் முழுப் பொதுவுடைமைவாதிகள். எங்கள் மூவரையும் அல்லாமல் திரு. விவேகானந்தன், திரு. சுப்பராயன் போன்ற பலர் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். யூனியனில் பல சமயங்களில் திரு. பாலதண்டாயுதமும் நானும் எதிர் அணிகளில் நின்று வாதிடுவோம். அம்மாதிரி நேரங்களில் துணைச் சபாநாயகரைத் தலைவர் பதவியில் இருத்திவிட்டு, நான் பேசுவதற்கு வந்துவிடுவேன். எனக்கு மூன்று ஆண்டுகளின் பின்னர்ச் சேர்ந்த பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் நானும் பாலதண்டாயுதமும் விவாதம் செய்யும்பொழுது முன்வரிசையில் அமர்ந்து ரசிப்பார்கள்.

இம்மாதிரி நேரங்களில் துணைவேந்தரும் முன் வரிசையில் வந்து அமர்ந்துவிடுவார். பாராளுமன்றத்தில் கேள்விநேரம் இருப்பதுபோல அந்த யூனியனிலும் கேள்வி நேரம் உண்டு. எல்லாவற்றிற்கும் மன்றத்தலைவரே பதில் சொல்லியாக வேண்டும். திடீர் திடீரென்று எதிர்பாராத வகையில் வினாக்கள் எழும். மன்றத்தலைவர் அதனைச் சமாளித்தாக வேண்டும். இங்குத்தான் துணைவேந்தரின்