பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ♦ 61


வாரிக்கொண்டான். ‘டென்னிஸ்’ ஆடிக்கொண்டிருந்த விவேகானந்தன் இதைக் கேள்விப்பட்டுத் தன்னுடைய அறைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த கானிங்ஹாம் மண்டையில், பின்புறம் நின்றுகொண்டு டென்னிஸ் மட்டையால் ஓங்கி அடித்துவிட்டான். மண்டை பிளந்து ஆங்கிலேயன் இரத்தம் அவனுடைய உடையில் கண்டபடிபாயத் தொடங்கியது. இதற்குள் துணைவேந்தருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கட்டிய வேட்டியுடன் அங்கே வந்த துணைவேந்தர், இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்த ஆங்கிலேயனைப் பார்த்து, “என் உத்தரவில்லாமல் உள்ளே நுழைந்தது பெருங்குற்றம்; இப்பொழுதே கவர்னரிடம் பேசப்போகிறேன் வேலையை இழந்து நீ நாட்டுக்குப் போகப்போகிறாய்” என்று சொல்லிவிட்டு, வேகமாகத் திரும்பினார். வெள்ளையன் நடுங்கினான். ஒழுகும் இரத்தத்துடன் அவர் எதிரே வந்து நின்று, காலைப் பிடிக்காத குறையாக “நான் செய்தது பெரும் குற்றம்தான். என்னை மன்னித்துவிடுங்கள்; இன்று இங்கு நடந்ததை மறந்துவிடுங்கள்; நான் இப்படியே கடலூருக்குத் திரும்புகிறேன்” என்று கூறிவிட்டுக் கூப்பிய கையுடன் தன்னுடன் வந்த காவலர்களையெல்லாம் வண்டியில் ஏறுமாறு பணித்துவிட்டான்.

“மன்னித்துவிடுங்கள்” என்று அவன் வேண்டியவுடன் இந்த மாமனிதர் உடனே அவனை மன்னித்துவிட்டார். பல்கலைக்கழக மருத்துவர், இராஜாராம் அவர்களை உடனே வரச்சொல்லி அந்த வெள்ளையனின் காயத்தைத் தைத்துக் கட்டுப் போடச் செய்தார். இந்த மாமனிதரின் மற்றொரு பகுதி இது.

இனிச் சொல்லப்போகின்றது எனக்கு அவர் செய்த பேருபகாரம் ஆகும். 1940இல் எம்.ஏ. (M.A.) பரீட்சைக்குப் பணம் ரூபாய் அறுபது கட்ட வேண்டும். அதற்கு