பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62 ♦ நான் கண்ட பெரியவர்கள்


முன்னரே பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை விரும்பி அவளைத் திருமணம் செய்துகொள்வதாகவும் முடிவு செய்துவிட்டேன். என்னுடைய சாதியைச் சேராத அப்பெண்ணைக் கலப்புமணம் செய்துகொள்வது என்பது அந்நாளில் மிகப் பெரிய புரட்சியாகும். இச்செய்தியறிந்த என் தந்தையார் பரீட்சைக்குக் கட்டுவதற்குரிய பணத்தை அனுப்ப மறுத்துவிட்டார். பணத்தை அபராதத் தொகையுடன் சேர்த்துக் கட்டவேண்டிய கடைசி நாளாகும் அது. குடும்ப நண்பராகிய நாட்டார் ஐயா அவர்களும் தந்தையாரின் கோபத்திற்கு அஞ்சிப் பணம் தர மறுத்துவிட்டார்.

வேறு வழியே இல்லாமல் என் காதலியின் இரண்டு ஜோடி தங்க வளையல்களைப் பெற்றுக்கொண்டு சிதம்பரத்திலுள்ள இந்தியன் வங்கிக்குக் சென்றேன். எடை முதலியன பார்த்தபிறகு 60 ரூபாய் கொடுக்கச் சம்மதித்து விட்டார்கள். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது, முகவரி என்ற பகுதியில், “93, கிழக்கு வளாகம், மாணவர் விடுதி, அண்ணாமலை நகர்” என்று எழுதினேன். இதைப் பார்த்த வங்கி அதிகாரி, “கொஞ்சம் இருங்கள்” என்று சொல்லிவிட்டுக் காவல் நிலையத்திற்கு போன் செய்துவிட்டார். ஒரு காவலர் வந்து “மாணவர் விடுதியில் தங்கியுள்ள உனக்கு நான்கு வளையல்கள் எப்படிக் கிடைத்தன? காவல் நிலையத்திற்கு வா” என்றார். நல்ல வேளையாக என்னுடைய புத்தி அப்போது நன்கு பணி செய்தது. தொலைபேசியில் துணைவேந்தரை அழைத்து, நடந்தவற்றைக் கூறினேன். வழக்கம்போலக் “கம்மனாட்டி! எங்கிட்ட வந்து கேட்காமல் எதற்காக ராஜம்மாவின் வளையல்களை வாங்கினாய்?” என்று திட்டிவிட்டு, அதே தொலைபேசியில் வங்கி மேலாளரை அழைத்து, “உடனே உங்களுடைய காரில் அவனை என்