பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழவேள் பி.டி.இராஜன் ♦ 73




குடமுழுக்கும் செய்வித்தார். அகில இந்திய வானொலி அந்நிகழ்ச்சியை நேரடியாக ஒலிபரப்பியது. நேர்முக வர்ணனையாளருள் யானும் ஒருவனாக மதுரை சென்றிருந்தேன். அன்னையின் விமானத்தின் அருகே எனக்குரிய இடம் அமைந்திருந்தது. மாவட்ட ஆட்சியாளர் உட்பட பல உயர் பதவியாளர்கள் அண்மையில் நின்று வளவள என்று பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் இருக்குமிடத்திலிருந்து ஒதுங்கி வந்து வர்ணனையாளனாகிய யான் நிற்குமிடத்திற்குப் பக்கத்தில் பி.டி.ஆர். அவர்கள் வந்து நின்றுகொண்டார். யாருடனும் ஒரு வார்த்தைகடப் பேசாமல் கண்களை மூடிக்கொண்டு அமைதியாகத் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். வர்ணனையயைச் செய்துகொண்டே அருகில் நிற்கும் அவரை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அரைமணி நேரத்திற்கும் அதிகமாக நீண்டுகொண்டிருந்த அவ்விழாவில் பி.டி.ஆர் கண்களைத் திறக்கவுமில்லை யாருடனும் பேசவுமில்லை. அன்னையின் ஆழ்ந்த பக்தர் ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை சொல்லாமல் செய்து காட்டியவர் பி.டி.ஆர்.

இளமையின் பெரும் பகுதியை மேலை நாட்டில் கழித்த பி.டி.ஆர் அவர்கள் இறைத்தொண்டும் மக்கள் தொண்டும் தம் வாழ்நாளின் முக்கிய குறிக்கோள் என்று கொண்டு பணிசெய்தார். அவர் மனத்தை இவ்வழிகளில் திருப்பியது அன்னை மீனாட்சியின் திருவருளே ஆகும். அகத்தே நின்று அத்திருவருள் பணிசெய்ததுபோல, புறத்தேயும் ஒருபணியைச் செய்தது. அது என்ன தெரியுமா? திருவாரூர் கோபால்சுவாமி முதலியார் பெற்றெடுத்த கற்பகம் என்னும் கற்பகத்தைப் பி.டி.இராஜனுக்கு மனைவியாக ஆக்கியதுதான். அகத்தே அன்னையின் திருவருள்; புறத்தே கற்பகம் என்னும் பெயருடைய மனைவி தரும் ஊக்கம். இவை இரண்டும் இணைந்து தொழிற்பட்டமையின் பி.டி.ஆர் தம் குறிக்கோளை நன்கு