பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் வருகின்றனராம். இந்தச்சாலையில் சுவீடன் நாட் ஷன் முன்னை நாள் பெருமையை உணர்த்தும் புதை பொருள்கள் பலவும் காட்சியில் வைக்கப்பட்டிருக் கின்றன. சூரிக் சுவிஸ் நாட்டின் மிகப் பெரிய நகரான சூரிக்கி லுள்ள உயிர்க்காட்சிச்சாலை அந்த நகரின் சிறந்த காட்சிகளுள் ஒன்று. மிகுந்தசெலவில் கட்டப்பட்டுத் தூய மலைக்காற்று வீசும் பகுதியில், உலாவுவதற் கேற்ற அகன்ற வழிகளுடன் கூடிய அழகிய பூங் காக்களுக்கு நடுவில் இச்சாலை இருக்கிறது. துப்பாக் கியால் சுடப்பழகும் கழகமும் இதற்கு அருகிலிரும் பது இச்சாலைக்கு மேலும் சிறப்புத்தருகிறது. சீரிய முறையில், சுகாதார விதிகளின்படி, அவ்வுயிர்க் காட்சிச்சாலை பேணப்பட்டு வருவது, சுவிஸ் நாட்டு மக்களுக்குத் தூய்மையாயிருத்தல் உடன்பிறந்தது என்ற கருத்தையே மேலும் வலியுறுத்துகின்றது. படம் வரையும் வகுப்புக்களைச் சூரிக் பள்ளிக்கூடங் கள் அந்த உயிர்க்காட்சிச் சாலையிலேயே நடத்து கின் றன. எந்த உயிரினத்தின் படத்தை அன்று வரைய வேண்டுமோ, அதன் முன்பு மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டு, அங்கேயே அன்றைய வகுப்பு நடைபெறும். அந்த உயிரினத்தைப் பார்த்தே மாணவர் படம் வரைகின்றனர். லண்டன் r ம் லண்டனிலுள்ள உயிர்க்காட்சிச்சாலை ரீஜண்ட் பூங்காவனத்தில் இருக்கிறது. இதன் நிலப்பரப்பு 34 ஏக்கர். இங்கேயுள்ளயானைக்குட்டிபிறந்தநாளை இவ்