பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் அமெரிக்கா அமெரிக்காவின் மூன்றாவது துறைமுகமும் முன்னாள் தலைநகருமான பிலடல்பியாவில், வர்த்தக பொருட்காட்சிச் சாலை (Cornmercial Museum)க்குச் சென்றேன். இக்காட்சியுள்ள கட்டிடத்தில் தான் புகழ்பெற்ற கன்வென்ஷன் ஹால். (Convention Hall) என்ற மண்டபம் இருக்கிறது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தத்தம் அபேட்சகர் களைத் தேர்ந்தெடுக்க அமெரிக்க அரசியல் கட்சி கள் இங்கேதான் கூடும். 15,000 பேர் அமரக்கூடிய இம் மாபெரு மண்டபத்தில் தூண்களே இல்லை! இத்தகைய சிறப்பான இடத்தில், 1894-ல் தொடங்கப்பட்ட, வர்த்தகப்பொருட்காட்சிச்சாலை, பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தாரால் நடத் தப்படுகிறது. வர்த்தகப் பொருள்கள் இங்கே ஒன்று சேர்ப்பதைத் தவிர, பலமொழிகளில் வணி கருக்கு வரும் கடிதங்களை அவரவர் மொழிகளில் மொழி பெயர்த்தல், உற்பத்தியாளர்களையும் விற்ப வர்களையும் இணைத்தல் போன்ற பணிகளையும் இந்தச் சாலையார் செய்கின் றனர். பல சிறந்த பொருட்காட்சிச் சாலைகள் நியூ யார்க் நகரில் உள்ளன. நான் 20 நாட்கள் இந்தக ரில் தங்கியும், இவற்றில் ஒன்றையேனும் பார்க்கா ததிலிருந்து, நியூயார்க்கில் நேரம் கிடைப்பது எவ் வளவு அரிது என்பது புலனாகும். அமெரிக்கர் ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கேற்ற அளவு அவரவர் இல்லங்களிலேயே, சிறிய பொருட்