லண்டன் 5 துணிவுடன் கூறலாம். ஆனால், இவ்விதிக்கு லண்டன் விலக்கானது. லண்டன் தான் பிரிட்டன்; லண்டனில் இருப்பவரே பிரிட்டிஷ் மக்களாவர். அமெரிக்கா தவிர ஏனைய நாட்டு வானொலிகட் கெல்லாம், பி.பி.சி. (British Broadcasting: Corporation) என்னும் பிரிட்டிஷ் வானொலிதான் அளவு கோலாக உள்ளது. உலகத்துப் பல்கலைக் கழகங்கட்கெல்லாம் ஆக்ஸ்போர்டுதான் மேற் கோள். பாரினிலுள்ள பாராளுமன்றங்கட்கெல் லாம் பிரிட்டிஷ் பாராளுமன்றந்தான் வழிகாட்டி. பலநாட்டு நீதி மன் றங்கள் யாவுக்கும் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்தான் முன்னோடி. உலகத்துப் பத்திரிகைகட்கெல்லாம் தலைமை தாங்குவன லண்டன் ப்ளீட் ஸ்ட்ரீட்' பத்திரிகைகளே. உலகத் தின் காலஅளவும் கிரீன்விச்' கடிகார நேரத்தை ஒட்டியே உள்ளது. இவற்றால், பிரிட்டிஷார் தம்நாடு, தம் மொழி இவற்றைப்பற்றி மிகப் பெருமைப்படுவார்கள். பிற மொழி கற்பதில் பிரிட்டிஷார் சோம்பேறிகள். அதற்கு அவர்கள் சமாதானமாக, "எல்லோருந் தான் எங்கள் மொழியைக் கற்றுக்கொண்டு விடுகி றீர்களே, நாங்கள் ஏன் உங்கள் மொழியைக் கற்க வேண்டும்?" என்று கூறுவர். பல்கலைக் கழகத்தா ரின் கட்டாயத்துக்காக வேற்றுமொழிகளைக் கற்று பிரிட்டிஷாரும் அவற்றைத் தேர்வு முடிந்தபின் மறந்துவிடுவர். பங்கீட்டு முறை பிரிட்டனில் உணவு, உடை, பெட்ரோல், சர்க்கரை இவை மட்டுமின்றிப் பால், தேயிலை, பிஸ்கேரத்து,
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/11
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை