பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 104 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் களுக்கு முன் நான் படித்த பின்வரும் பத்திரிகைக் குறிப்பு என் நினைவுக்கு வந்தது. அதாவது "ஓர் ஆங்கிலேயருடைய தலை வழுக்கையாயிற்று; திரும் பவும் மயிர்வளரும்படி செய்ய அவர் பெரும்பொருள் செலவு செய்தார்; ஒரு ஸ்காட்சுக்காரரின் தலை வழுக்கை யாயிற்று; அவர் உடனே சீப்பை விற்று விட்டார்!" என்பதாகும். இதனால், நானே அந்த ஸ்காட்சுக்காரர்களுக்குச் சேர்த்துப் பணம் கொடுக்க முற்பட்டேன். ஆனால் அவர்கள் எனக்கும் சேர்த்துத் தாமே பணம் செலுத்தினர். விருந்தின் ரைப் பேணும் பண்பு நம் நாட்டவரின் தனி உரிமை அன்று; எல்லா நாட்டினருக்கும் பொதுவான வழக்கம் என்பதைச் சொல்லவே இந்நிகழ்ச்சியைப் பற்றி இங்கு விரிவாகக் குறிப்பிட்டேன். விருந்தோம்பும் முறை . என்ற "உண்டிக்கழகு விருந்தோடுண்டல் " கமது பழமொழியைப் போல "வீட்டில் ஒரு விரு தினர் இருப்பது வீட்டில் ஒரு கடவுள் இருப்பது போலாகும்" (Guest in the home is God in the home) என்று 'செக்' மொழியில் ஒரு பழமொழி இருப்பதாகப் பிராட்டிஸ்லாவா நகரில் ஒரு நண்பர் கூறி, அவருடைய பங்கீட்டுச் சீட்டுக்குரிய பொருள் களை எனக்குத் தரலாம் என்று நான் தங்கியிருந்த உணவு விடுதி அதிகாரிக்குத் தெரிவித்தார். ஆனால், மேனாட்டவர்கள். விருந்தினர் தனைப்பேர் என்பதையும், யார் யார் என்ப தையும், எப்போது வருவார்கள், எவ்வளவு நாட்கள் த குவாரகள் என்பதையும் முன்பே அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.