பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் 111 கூட்டம் நடக்கும் முறை அமெரிக்காவில் கூட்டங்கள் நடக்கும் முறையும் குறிப்பிடத்தக்கது. மாலை 3 மணிக்கு ஒரு கூட்டம் தொடங்குவதாக இருந்தால், சரியாக 6 மணிக்கு அந்தக் கூட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்லும் வழியிலுள்ள கதவுகளெல்லாம் மூடப்பட்டுவிடும். கூட்டம் முடிந்த பின்னரே அவை மீண்டும் திறக்கப் படும். இதனால் கூட்டத்துக்குயாரும் காலந்தாழ்த்து வருவதோ அல்லது கூட்டம் அல்லது கூட்டம் முடியுமுன் சிலர் எழுந்து செல்வதோ அங்கே நிகழாதனவாகும். பேசும் முறை மூன்று நான்கு பேர்கள் சந்திக்கும்போது, ஒருவர் பேசுங்கால் மற்றொருவர் குறுக்கிட்டுப் பேசு வது நாகரிகமற்றதாகக் கருதப்படுகின்றது. ஒருவர் பேசி முடித்தபின்னரே அடுத்தவர் பேசுவார். அல்லது, இன்றியமையாமல் உடனே கூறவேண் டியதிருப்பின், பேசிக்கொண்டிருப்பவரின் உடன் பாட்டைக் கேட்பது வழக்கம். கல்வியில் ஆர்வம் கல்வியில் அமெரிக்கருக்கு உள்ள ஆர்வத் க்குச் சான்றாகப் பின்வரும் இரண்டு நிகழ்ச்சி களையுங் கூறலாம். தம் முன்னாள் ஆசிரியர் கல்லூரி யினின்றும் ஓய்வுபெறும் நாளில், அவர்கள் கல்லூரிக்குச் சென்று அந்த ஆசிரியருக்கு மரி யாதை செலுத்துவர். ஹார்வர்டு, கொலம்பியா பல்கலைக்கழகப் பட்டதாரிகள் தம் உயிலில் (Will) அப் பல்கலைக் கழகங்களுக்காக ஒரு தொகையை ஒதுக்கிவைக்கிறார்களாம்.