பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் 113 காவது குறைந்த செலவில் குழுவாக அழைத்துச் செல்லும் நிலையங்களும் உள்ளன. மற்றும் சில வழக்கங்கள் ஜெர்மனியில் சாலைகள் சந்திக்குமிடங்களில் ஒவ்வொரு சாலையிலும் அந்தச் சந்திப்பிலிருந்து எந்த எந்தத் திக்குகளில், எந்த எண் முதல் எந்த எண்வரை உள்ள கட்டிடங்கள் இருக்கின்றன என்ற விளக்கமானது பெயரைத் தெரிவிக்கும் அறி விப்புப் பலகையிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் சாலைகளில் ஒற்றைப்படை எண்ணுள்ள கட்டிடங்கள் ஒரு புறமும்,இரட்டைப் படை எண் ணுள்ள கட்டிடங்கள் எதிர் வரிசையிலும் இருக்கும். அமெரிக்கர் மாதத்தின் எண்ணை முதலிற் குறித்து, அதன் பின்னரே தேதியின் எண்ணை எழுதுவர். உதாரணமாக, 1949-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 27-ஆம் நாள் என்பதற்கு 10-27-1949 என்றுதான் எழுதுவர். அ பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர் தவிர, ஏனைய உலகமக்கள் எல்லோரும் கடவுள் அன்பு உடையவர் களாக இருக்கின்றனர். முடிவுரை பொருளாதாரச் செழிப்பான நாடுகளிலெல் லாம் மக்கள் கல்வியில் ஆர்வமும் கட்டுப்பாடும் சுறு கூறுப்பும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகை 'யால் நாமும் பொருளாதாரத் துறையில் முன்னேற வேண்டுமானால் இப்பழக்கங்களைக் கையாளுதல் இன்றியமையாததாகும்.