பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் சாக்லட், முட்டை, சோப்பு, சிகரட்டு, செருப்பு, மின்சாரம், வெளிநாட்டுப் பிரயாணம் இவைகளும் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. எனினும், பிரிட்டிஷார் தமது நாட்டுப்பற்றால், இப்பங்கீடுகள் செவ்வனே நடைபெற அரசியலாருக்கு உதவி புரிகின் றனர். அவற்றின் குறைகளைப்பற்றி அவர்கள் முணுப்பதில்லை. முணு பிரிட்டிஷ் பங்கீட்டுமுறையின் ஒரு சிறப்பை யும் ஈண்டுக் குறிப்பிடலாம். உண்பது நாழி, உடுப்பவை இரண்டே (புறநா னூறு 189) என்ற பண்டைத் தமிழ்க் சுருத்து மிக்க குளிரான நாடாகிய பிரிட்டனுக்குப் பொருந்தாது.எனவே, குறைத்து உண்ண விரும்பு வோர் மிகுதியாக உடுக்கவும், குறைத்து உடுப்போர் மிகுதியாக உண்ணவும் பங்கீட்டு முறை இடம் தருகின்றது. உதாரணமாக, ஒவ்வொருவருக்கும் உணவுப் பங்கீட்டுச் சீட்டும், 10 துணிப் பங்கீட்டுச் சீட்டும் இருந்தால், ஒருவர் தமது துணிப் பங்கீட்டுச் சீட்டில் இரண்டுக்குப் பதிலாக, பிஸ்கோத்துச் சீட்டு ஒன்றும் தேயிலைச் சீட்டு ஒன்றும் வாங்கிக் கொள்ளலாம். பிரிட்டிஷாரின் குணங்கள் பிரிட்டிஷார் மிகமிகப் பொறுமை யுள்ள வர்கள். பொறுத்தார் பூமியாள்வார் என்பது இவர் களைப் பொறுத்த வரையில் உண்மையாகிவிட்டது. ஈகை, இரக்கம் முதலிய குணங்களும் பிரிட்டி ஷாரிடம் உண்டு. மேற்போக்காக நோக்குங்கால், இவர்கள் கவனக் குறைவானவர்கள்போல் தோன்றுவர். ஆயினும், தாம் ஈடுபடும் எவ்வேலை யையும் ஊன்றிக் கவனித்துச் செய்வன திருந்