நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் எனினும், தேயிலைச் சந்தைக்கு இருப்பிடம் லண்ட னேயாகும். ரப்பர் இந்தியாவிலும் இலங்கையிலும் மலேயாவிலும் கிடைக்கின்றது; ஆயினும், இப் பொருளின் விலைலண்டனில்தான் வரையறுக்கப் படுகிறது. நம்நாட்டுச் சரக்குகளையும் வெளிநாட்டார் நம்மிடமிருந்து நேரே வாங்குவதற்குப் பதிலாக லண்டன் வாயிலாகவே வாங்க விரும்புகின்றனர். ஆகவே, நாமும்,யாரையும் மகிழ்விக்கும் பேச்சைப் பின்பற்ற வேண்டும். பிறரை ஏமாற்றுவதற்காக அன்று; வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காகவே யாம் பிரிட்டிஷார் பழமையில் நம்பிக்கையுடை யோர்; புதுமைப்பித்தர் அல்லர். உலகமுழுவதும் போக்கு வரவு வலதுகைப்புறமாகச் சென்றும், பிரிட்டிஷார் மட்டும் இன்னும் இடதுகைப்புற மாகவே போக்குவர்வு முறைவைத்துள்ளனர். உலக முழுவதும் நீட்டல், நிறுத்தல், முகத்தல் அளவை களையும் நாணயத்தையும் தசாம்ச முறைப்படியே வகுத்தும், பிரிட்டிஷார் மட்டும் தங்கள் முறைகளை மாற்றவில்லை.இவை போன்ற நிகழ்ச்சிகள் மிகப் பல். கதம்பம் பிரிட்டிஷாருக்கு மிக விருப்பமானவை மன்னர். குடும்பம், மாட்டுக்கறி, சாக்லட், டிரைபிள் (Trifle) என்னும் ஓர் உணவு, கட்டுப்பாடு, வரிசை முறை (Queue), பேச்சுரிமை,சட்டையிலிருந்து தனித்து உள்ள காலர், கிரிக்கட், நாய்ப்பந்தயம், காலை 8 மணக்குத் துயிலெழுதல், வார இறுதி நாட்கள்,
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/14
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை