பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் இவற்றை எல்லாம் படிக்க வேண்டுமாம். கத்திக் குத்தைத் தடுக்கவும் தற்காப்புடனிருக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறதாம். போலி நீதி மன்றங்கள் நடத்தி, உண்மை நீதி மன்றங்களில் சாட்சி கூறும் முறையைச் சொல்லிக் கொடுக்கிறார்களாம். . சாலைகளில் எப்படி நடக்கவேண்டும்? போலீ சார் வகை வகையாய்க் கை காட்டுவதன் பொருள் என்ன? என்பவைகளை எல்லாம் பள்ளிச் சிறுவர் களுக்கு வாரந்தோறும் சொற்பொழிவுகள் மூலம் பள்ளிக்கூடங்களில் போலீசார் விளக்கிக் கூறு கின்றனர். மேலும், போலீசார் பள்ளிக்கூட விளை யாட்டிடங்களுக்குச் சென்று, எல்லா வகையான வாகனங்களையும் ஓட்டி, விபத்துக்கள் எப்படி உண்டாகின்றன? அவைகளை எவ்வாறு தடுக்க லாம்? என்பவற்றை விளக்கிக் காட்டுகிறார்கள் ; போக்கு வரவுச் சட்டங்களையும் மாணவருக்குச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கின்றனர். . இவற்றால், லண்டனில் போலீசாருக்குப் பெரும் மதிப்பு உண்டு. லண்டன் போலீசாரை அறிவுக்களஞ்சியம் என்றுங் கூறுவதுண்டு.நமது போலீசாரும் இந்நிலை எய்த, அரசியலாரும் போலீ சாரும் ஆவன செய்யவேண்டும். அது மட்டும் போதியதாகுமா? பொதுமக்களாகிய நாமும்,புதிய (நட்புக்) கண்களோடு போலீசாரை நோக்க வேண்டும்.