14 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் மூன்று குழந்தைகள் உடையவர் பெரிய குடும் பத்தாரெனச் சுவீடனில் கருதப்படுகின்றனர். ஏனெனில், ஒவ்வொரு நூறு குடும்பத்தாருள், 83 குடும்பத்தார் ஒரு குழந்தை உடையவராகவும், 12 குடும்பத்தார் இரண்டு குழந்தைகள் உடையவராக வும், எஞ்சிய 5 குடும்பத்தார் மட்டுமே மூன்று குழந்தைகள் உடையவராகவும் இருக்கிறார்கள். வரலாறு பல நூற்றாண்டுகள் பேராசாக விளங்கியதும், கி. பி. 862 முதல் 500 ஆண்டுகட்கு ரஷ்யாவில் அரசு செலுத்தியதும் ஆகிய சுவீடன், இப்போது ஆதிக்க ரசியலினின்றும் விலகித் தனித்து விளங்குகிறது. பேரரசுகளாலேயே, உலகப் போர்கள் நடைபெறு கின்றன என்ற உண்மையைச் சுவீடன் நாட்டவர் உணர்ந்திருப்பதே இம்மாறுதலுக்குக் காரணமா ம். மூன்று நூற்றாண்டுகளாகப் பிறநாட்டு அரசி யல் நிகழ்ச்சியில் சுவீடன் தலையிட்டதில்லை. ரஷ்யா, ஜெர்மனி ஆகிய ஒன்றுக்கொன்று பகையான இரு பெரும் நாடுகட்கு அண்மையிலிருந்தும், போர் தம் நாட்டுக்குப் பரவாமல் சுவீடன் நாட்டவர் தங்களைப் பாதுகாத்துக்கொண்டனர். இதன் பயனாக, இந் நாட்டில் அமைதி நிலவிற்று. இவ்வமைதியே, இந் நாட்டின் பொருளாதாரச் செழிப்புக்கு அடிப்படை யாகும். தட்ப வெப்ப நிலை சுவீடனில் மழை மிகுதியாகவே பெய்கின்றது. எப்போதாவது வேண்டும் அளவு மழை பெய்யாவிட் டால், அக்காலங்களில் வேளாண்மைத்தொழிலுக்கு
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை