இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நடுவழி நாடு 17 மன், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் ஆகியவற்றுள் இரண்டு மொழிகள் கட்டாயப் பாடமாக இருக்கின் றன். பல ஜெர்மன் பேரறிஞர்கள் இப்போது சுவீடிஷ் பல்கலைக் கழகங்களிற் பணியாற்றுகின் றனர். எல்லா மாணவர்கட்கும், கல்வியின் இறுதி யில் 9 மாதப் படைப்பயிற்சி உண்டு. சுவீடனில் 1000 பேருக்கு ஒருவரே எழுத்தறிவு இல்லாதவர். நகரங்கள் . சுவீடனின் பெரிய நகரங்கள் ஸ்டாக்ஹோம், கோ தன்பர்க், மால்மோ என்பன. இவற்றுள் ஸ்டாக் ஹோம் இந்நாட்டின் தலைநகராக உள்ளது. இது ஸ்டாக்ஹோம் நகரின் ஒரு காட்சி உலகின் மிக அழகிய நகரங்களுள் ஒன்று; வரலாற் றில் இடம் பெற்றது. பதின்மூன்று ஏரிகளுக்கும் பல குன்றுகளுக்கும் இடையே அமைந்துள்ள இந்நகரின்