பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் இவை ஒன்றேனும் திருடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுவீடிஷ்காரருக்கு மிக விருப்பமானவை:- உறைந்த பனிக்கட்டியில் ஓடி விளையாடுதல், படகோட்டுதல், காரமான புகையிலை, நள்ளிரவுச்சூரியன்,அதிகாலை யில் எழுந்திருத்தல்,மாநிறம் முதலியனவாம். ,

தந்தை புகழ்பெற்றவராயிருந்தால், மகன் தன் பெயரை விட்டுவிட்டுத் தந்தையின் பெயருக்குப் பின் 'மகன்' என்ற சொல்லைச் சேர்த்துக்கொள் வது சுவீடிஷ் மக்களின் இயல்பு. பொதுவாகச் சுவீ டிஷ்காரர்கள் கணக்கில் வல்லுநரல்லர். அவர்கள் இதனால்தான் தசாம்ச முறையிலேயே நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவுகள், நாணயம் இவற் றையெல்லாம் அமைத்துக்கொண்டனர் போலும் ! மிகச் சிறிய கூட்டல், கழித்தல் கணக்குகட்குக்கூட அவர்கள் இயந்திர உதவியை நாடுகின்றனர். பொருளாதார நிபுணர் பலர் சுவீடனில் உளர். சுவீடனின் ஏற்றுமதிகள் காகிதம், தளவாடச் சாமான்கள், பீங்கான்,பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லுவதுண்டு. விஞ்ஞான முன்னேற்றம் தீப்பெட்டி, டைனமைட், ஐஸ்பெட்டி, சிக்கலைக் குறைக்கும் ரவைகள் (Ball-bearings), டெலிபோன், டீசல் இயந்திரம், கிரசின் ஸ்டவ் ஆகிய கருவிகள் அனைத்தும் சுவீடன் நாட்டினராலேயே முதன் முத லிற் கண்டுபிடிக்கப் பட்டவையாகும். இவற்றி லிருந்து சுவீடனில் விஞ்ஞானம் அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒருவாறு அறியலாம்.