பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவழி நாடு திரைப்படக்காட்சிச் சாலைகள்-2242. டெலிபோன் கருவிகள் - 13,00,000. ஆகாய விமான நிலையங்கள் - 30, மோட்டார் கார்கள்-2,00,000. 23 இருப்புப் பாதையின் நீளம் -10,400 மைல்கள். தினசரிப் பத்திரிகைகள் - 230. இருப்புப் பாதைகள் அடுத்த அமெரிக்க இருப்புப்பாதைகளுக்கு படியாக, உலகில் சிறந்த இருப்புப்பாதைகள் சுவீ டனில் உள்ளவையேயாகும். மிக அழகிய மின்சார ரயிலொன்றில் 5 மணி நேரத்தில், கோதன்பர்கி லிருந்து 300 மைல் தொலைவிலுள்ள ஸ்டாக்ஹோ முக்கு நான் ஒரு முறை சென்றது என் மனத்தை விட்டு என்றும் அகலாது. சுவீடனில் பகற் பிரயாணத்திற்கும் இராப் பிர யாணத்திற்கும் தனித்தனி ரயில் வண்டிகள் உண்டு. இரவில் ஓடும் ரயில்களில் எல்லா வகுப்புப் பிர யாணிகளுக்கும் உறங்கும் வசதி தரப்படுகிறது. எல்லா ரயில்களிலும் புகை பிடிப்பவர்க்கும் பிடி யாதவர்க்கும் தனித்தனி வண்டிகள் உண்டு. ஓடும் ரயிலிலேயே பிரயாணிகள் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு நடந்து செல்வதற்குத் தக்க படி வழி விடப்பட்டிருக்கிறது. இந்த நடைவழிகளி லுள்ள தானே மடக்கிக்கொள்ளும் நாற்காலிகளில் இருந்துகொண்டு, பிரயாணிகள் இயற்கைக் காட்சி களைக் கண்டு களிக்கலாம். இன்றியமையாப் பொருள்கள் பலவற்றை வணிகர் ரயிலிலேயே ற்கின்றனர். குப்பையைப் போடுவதற் குக் தொட்டிகளும் ரயில்களில் வைக்கப் பட்டுள்ளன. குடி தண்ணீர்க் குழாய்களும் வி