வட அயர்லாந்தில் சில காட்கள் 27 உற்பத்தி மிகுந்துள்ளது. யுனைட்டெட் கிங்டம் எனப்படும் ஐக்கிய முடியரசின் சிறந்த துறைமுகங் களுள் பெல்பாஸ்டும் ஒன்றாகத் திகழ்கின்றது. பல்கலைக்கழகம், தொழிற்கல்லூரி, நீதிமன்றம், பொருட்காட்சிச்சாலை (Museum) ஆகியவை இருக் கும் நாகரிகமான கட்டிடங்களும் வேறு பல சிறப் புக்களுமுடைய இந்நகரத்துக்கு, 1948 அக்டோபர் 16-ல் லண்டனிலிருந்து வான வழியாகப் போய்ச் சேர்ந்தேன். அயர்லாந்து அயர்லாந்து இங்கிலாந்தை அடுத்துள்ள ஒரு தீவு. அரசியல் குழப்பங் காரணமாக இந்தியா இரு கூறாகப் பிரிக்கப்பட்டதுபோல், அயர்லாந்தும் தென்பகுதி வடபகுதிகளாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரிவுசெய்யப்பட்டது. தென் அயர்லாந்து புரட்சி இயக்கத்தின் இறுதியில், முழு பெற்று, இப்போது ஐரிஷ் பிரீஸ்டேட் (Irish Free State} என்ற குடியரசாக விளங்குகிறது. வட அயர்லாந்து உரிமை வட அயர்லாந்து எனப்படும் அல்ஸ்டர் என்ற பகுதி பிரிட்டிஷ் பாராளுமன்ற ஆட்சியிலேயே இருந்துவருகிறது. உள்நாட்டுச் செயல்களில் அதி காரம் செலுத்தும் வட அயர்லாந்துப் பாராளுமன்ற மும் அமைச்சர் குழுவும் பெல்பாஸ்டிலேயே இருக் கின்றன. வட அயர்லாந்து யுனைட்டெட் கிங்டத்தின் ஒரு பகுதியே; 'யுனைட்டெட்கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் அண்டு நார்த்தர்ன் அயர்லாந்து' (United Kingdom of Great Britain & N. freland) என்பதையே, சுருக்க
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை