பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் காரர்கள் கப்பல் கட்டும் தங்கள் பண்டைப் பெருமை யோடு மனவமைதி அடைந்துவிடாமல், இந்த கப்பல் கட்டும் தளங்கள் ஆகாய விமானக் காலத்தில், ஆகாய விமான உ பத்தியிலும் முன்னணியில் இருக்கின்றார்கள். லினன் உற்பத்தியும் அல்ஸ்டரின் மிகப் பெரிய தொழிலாகும். ஐரிஷ் லினனைப்பற்றிக் கேள்விப் படாதார் யார்? ஆண்டுதோறும் பன்னிரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள லினன் துணி அல்ஸ்டரி லிருந்து ஏற்றுமதி ஆகிறதாம். ரயான் என்னும் செயற்கைப்பட்டு மோகம், தொத்து நோய்போல். மிகுந்துவரும் இந்நாளில் அல்ஸ்டர்காரர்கள். லினன் தொழிலோடு நிற்பார்களா? யாருக்கும் எதி லும் பின்வாங்காத இந்த மக்கள் இப்போது ரயான் உற்பத்தியையும் பெருக்கிவிட்டார்கள். எல்லாவகையான துணிகளின் உற்பத்தியிலும்