பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.617'6 வட அயர்லாந்தில் சில நாட்கள். 31 உட்பிரிவுகள் பலவும் அல்ஸ்டரின் வளத்தை அதிகரிக்கின்றன. செங்கல், சிமிண்டு, லினன் தொழிற்சாலை மீன், முட்டை உற்பத்திகளாலும் இந்நாட்டுக்கு மிக்க வருமானம் கிடைக்கிறது. பிரிட்டனின் உயிர்நாடி அல்ஸ்டர்காரர் பிரிட்டனின் உயிர்நாடி தம் மிடம் இருப்பதைப்பற்றிப் பெருமை கொள்ளு கிறார்கள். பிரிட்டனின் உயிர்நாடி தம்மிடம் இருப் பதாக அமெரிக்கர் கருதுகின்றனர்; ஆஸ்திரேலி யர் தம்மிடம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அல்ஸ்டர்காரர் சொல்லுவதில் உண்மை நிரம்பி யிருக்கிறது. புலாலும் பாலும் அல்ஸ்டரிலிருந்து தான் பிரிட்டனின் பெரும் பகுதிக்கு அனுப்பப் படுகிறது. யாழ்ப்பாணத்தாரின்றி மலேயா ரயில் கள் ஓடா; சென்னை மாகாணத்தாரின்றி இந்தியப் பத்திரிகைகள் வெளிவர மறுக்கின்றன; ஸ்காட்சுக் காரரில்லாத பிரிட்டிஷ் பேங்கு பருப்பில்லாத