பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் கல்யாணத்தை ஒத்ததே. இவைபோல் அல்ஸ்டக் காரரின்றிப் பிரிட்டிஷ் ரயில்களை ஓட்ட முடியாது. அவர்களின்றிப் பிரிட்டிஷ் படைகளும் முன்னேறு வதில்லை. பிரிட்டிஷ் சிவில் சர்வீசும் இப்படியே தான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு வட அயர்லாந்தின் ஒரே கேள்வி, தென் அயர் லாந்துடன் சேர்ந்துவிடுவதா? கூடாதா? என்பதே. பூகோள அமைப்பால், இரு அயர்லாந்துகளும் ஒரே தீவாக இருக்கின்றன. இவ்விரு நாடுகட்கிடையே வட அயர்லாந்துப் பள்ளிக்கூடம் யுள்ள எல்லைகள் இயற்கையாய் அமைந்தன அல்ல; அரசியல் சதுரங்கத்தின் விளைவால் ஏற்பட்டவை யாகும். பாக்கிஸ்தானைப்போல தென் அயர்லாந்தில் உணவுப் பொருள்கள் மிகுதியாக உள்ளன. வட அயர்லாந்தில் இந்தியாவைப்போலச் சில ஆண்டுகளில் உணவுப்பற்றாக்குறை ஏற் படுவது உண்டு. இக்காரணங்களால், இரு காடு களையும் இணைக்க வேண்டுமென்ற கிளர்ச்சியிலே,