குயின் எலிசபத் கப்பலில் காணப்படும் பல விநோதங்கள் 87 உலகின் எப்பகுதிக்கும் இக்கப்பலில் இருந்த வாறே வானொலித் தொலைப் பேச்சு (Radio Telephone) மூலம் பேச இயலும். 10,000 மைல் கட்கு அப்பாலுள்ள தம் குடும்பத்தாரோடு இக்கப் பல் பிரயாணிகள் டெலிபோனில் பேசுவதும், தத் தம் அலுவலகங்களுடன் நடுக்கடலிலிருந்தவாறே தொடர்புகொண்டு பெரிய வியாபாரங்களை முடிப் பதும், நாள்தோறும் நடைபெறும் விநோதங்களிற் சிலவாகும். ை "Ocean Times" என்ற தினசரிப் பத்திரிகை இக்கப்பலிலேயே அச்சிட்டு நாள்தோறும் பிர யாணிகட்கு வழங்கப்படுகிறது. இப்பத்திரிகையில், செய்திகளும் கட்டுரைகளும் விளம்பரங்களும் பகுத் தறிவுப் போட்டியும் வெளிவருகின்றன. ஆசிரியர் கருத்துக்கள் மட்டும் இப்பத்திரிகையில் இல்லை. எல்லாப் பிரயாணிகளின் பெயர்களும் அடங் கிய புத்தகம் ஒன்று, ஒவ்வொரு பிரயாணத்திலும் இக்கப்பலிலேயே அச்சிட்டுப் பிரயாணிகட்கு வழங்கப்படுகின்றது. இங்கிலாந்தின் ஐந்து பெரும் பேங்குகளில் மிட்லண்டு பேங்குக்கு இக்கப்பலில் மூன்று கிளைகள் உண்டு. ஒன்றான * டென்னிஸ் விளையாடும் இடம், உடற்பயிற்சிச்சாலை, இயந்திரமூலம் நடக்கும் குதிரைப்பந்தயம், பிற்பக வில் கப்பல் வாத்தியக் குழுவின் இன்னிசை ஆகிய
மற்ற நான்கு பேங்குகள் : பார்கிளேஸ் பேங்கு, லாயிட்ஸ் பேங்கு, நாஷனல் புரவின்ஷியல் பேங்கு. வெஸ்ட்மினிஸ்டர் பேங்கு ஆகியவை.