பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.88 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் இவை, பொழுதுபோக்குக்கு உதவும் சாதனங் களிற் சில. இவை பற்றிய அறிவிப்புகள் அடங்கிய நிகழ்ச்சி நிரலை நாள்தோறும் எங்களுக்கு அச்சிட் டுத் தந்தனர். குயின் எலிசபத் கப்பலின் பிற சிறந்த பகுதி களிற் குறிப்பிடத்தக்கது அதனுள்ளிருக்கும் நூல் நிலையம். அதில் பல மொழிகளில், சில ஆயிரம் புதிய நூல்களும் பல பத்திரிகைகளும் சஞ்சிகை களும் இருக்கின்றன. '. உள்ள ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெரிய உணவு விடுதிகளில் தங்குவதற்கான முன் னேற்பாடுகள் செய்யும் அலுவலகமும் இக்கப்பலி லேயே இருக்கிறது. பிரயாணிகள் கடிதங்கள் எழுதுவதற்கும், புகை பிடிப்பதற்கும், சீட்டாடுவதற்கும் தனித் தனியே பல அறைகள் (Lounges) அமைக்கப்பட் டுள்ளன. வற்றில் குறிப்பிட்ட நேரங்களில் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். இக்கப்பலிலுள்ள நடனசாலைகள் (Danee Halls) தனி அழகு உடையன. இக்கப்பலில் உயர்ந்த மரங்கள் தூண்களாகவும் சுவர்களாகவும் உருவெடுத்து அழகுக்கு அழகு செய்கின்றன. உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஓவியங் கள், கண்ணைக்கவரும் பலநிறப் படங்கள், யாவருக் கும் கலையின் மேம்பாட்டை உணர்த்தும் அரியசிற் பங்கள் இவற்றின் பற்பல காட்சிகளை இக்கப்பலிற் காணலாம். பிரயாணிகளின் குழந்தைகட்கு (அல்லது குழந் தைப் பிரயாணிகட்கு) விளையாடும் இடங்களும் பொம்மைகளும் மற்ற விளையாட்டுக் கருவிகளும் உள்ளன.