40 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் கருவிகளுள்ள உணவாக்கும் சாலையும், ஒரே காலத் தில் 850 பேர் உணவருந்தக்கூடிய இடமுள்ள 'ஏர் கண்டிசன் (Air-Condition) செய்யப்பட்ட மண்டப மும், குழந்தைகள் உணவருந்துவதற்கென ஒரு தனி அறையும், நீந்துங்குளங்களும், நோய் தீர்க்கும் வன்மையுடைய நீரில் குளிக்க வசதியும், ரோட்டரி கிளப் கூட்டங்கள் நடக்கத் தனி இடமும் இக்கப் பலில் இருக்கின்றன. கிறித்தவர்களும் யூதர்களும் அவரவர் கடவுளை வழிபடுவதற்குத் தனி இடங்கள் உள்ளன. இரும்பாலும் எஃகாலும் ஆக்கப்பட்ட நகரம் என்றும், மிதக்கும் அரண்மனை என்றும் இக்கப்பலைப் பலர் பல பெயர்களால் புனைந்துரைத் திருப்பதில் சிறிதும் தவறு இல்லை. மின்சாரக் கப்பல் இக்கப்பலிலுள்ள மின்சாரக்கம்பி (Electric Wire) யின் நீளம் 4.000 மைல் என்றால், விளக்கு களின் சிறப்பை விளக்கவும் வேண்டுமோ? விளக்கு கள், லிப்ட்டுகள், டெலிபோன், 10 மைல் சுற்றள வுக்குக் கேட்கும் அபாய அறிவிப்புச் சங்கு, கப்ப லின் இயந்திரம், நீராடுவதற்கு வெந்நீர் - இவை மட்டுமல்ல - கப்பலின் சமையல்வேலை முழுவதுமே மின்சாரத்தால் நடைபெறுகின்றது. பிரயாணிகட் காகப் பல டன் அளவுள்ள பாலை ஐஸ் பெட்டியில் காப்பதும் மின்சாரமே. 25,000 மக்களுள்ள ஒரு நகரத்துக்கு வேண்டுவதைக் காட்டிலும், மிகுதி ரோட்டரி கிளப் என்பது செல்வாக்குள்ள பெரிய வணி கரும் வேறுபட்ட பல துறைகளில் உயர்நிலை எய்தியவர்களும் உறுப்பினராயுள்ள குழு: இது உலக முழுதும் பரவியுள்ளது. இதன் உறுப்பினருக்கு ரோட்டரியன்' எனப் பெயருண்டு. இக் குழுவினர் பொது நன்மைக்காகப் பல பணிகள் ஆற்றுகின்றனர்.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை