பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் எனவே, விஞ்ஞானத் துறையில் ராடார் கண்டு வியக்கத்தக்க முன்னேற்றம் பிடிக்கப்பட்டது என்றே கூறவேண்டும். கப்பலின் பெருமை குயின் எலிசபத் 850 முதல்வகுப்புப் பிரயாணி களையும், 720 இரண்டாவது வகுப்புப் பிரயாணி களையும் 745மூன்றாவது வகுப்புப் பிரயாணிகளையும் 1200 வேலையாட்களையும் ஏற்றிக்கொள்ளுகிறது. இவ்வாறிருந்தும் இக் கப்பலுக்கு டிக்கட்டு வாங்கு வது குதிரைக் கொம்பாக இருக்கிறது. சில மாதங் களுக்கு முன்பே முயற்சி செய்தால், பெரும்பாலும் டிக்கட்டு கிடைத்துவிடும். ஆகாய விமானக் கட்ட ணத்தைக் காட்டிலும் மிகுதியான பணம் கொடுத்து இக் கப்பலின் முதல் வகுப்பு டிக்கட்டு வாங்க வேண்டி யிருப்பதிலிருந்து, இக் கப்பலில் பிரயா ணம் செய்வதில் மக்களுக்குள்ள ஆர்வம் இத்தகை யதென அறியலாம். ஆறு மாதங்கட்கு முன்னரே டிக்கட்டு வாங்கிய என்னிடம், ஓராண்டுக்கு முன்பே டிக்கட்டு வாங்கியதாகச் சில நண்பர்கள் கூறிய போது, அவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதா, அல்லது அனுதாபப்படுவதா என்று தெரியவில்லை. ள இக் கப்பலின் ஒவ்வொரு பிரயாணத்திலும் புகழ் பெற்றவர் பலரைச் சந்திக்க இயலும். என் னுடன் பிரயாணஞ் செய்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கனடா நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் கிங், பிரான்சில் இந்தியாவின் தூதராகத் தொண்டு செய்யும் சர்தார் எச். எஸ். Aலிக், பிரிட்டிஷ் பாராளு மன்றத்தின் இரு பகுதிகளின் பல உறுப்பினர் மக்கன்சீ