44 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் இரண்டாம், மூன்றாம் வகுப்பு அறைகளில் மேற் குறித்தவற்றினின்றும் சிறிது குறைந்த வசதிகள் உள்ளன. முதல் வகுப்பில் மட்டும் ஒவ்வொரு பிரயாணிக்கும் தனி அறை உண்டு. கப்பலின் வேகமும் வருமானமும் சதாம்ப்டனிலிருந்து நியூயார்க் வரையுள்ள 3088 கப்பல் மைல்களை (Knots) (அதாவது ஏறக் குறைய 3500 சாதாரண மைல்களை) இக் கப்பல் 4நாள், 20 மணி, 45 நிமிட நேரத்தில் கடந்தது. அதாவது இதனுடைய சராசரி வேகம் 261 கப்பல் மைல்கள் அல்லது சற்றேறக்குறைய முப்பது 1 சாதாரணமைல்கள். முதல் நாள் பகல் 12 மணி முதல் மறு நாள் பகல் 12 மணி வரை கப்பல் எத்தனை மைல்கள் பிரயாணம் செய்திருக்கிறதென்பதும், பகல் 12 மணிக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங் கடலில் எந்த இடத்தில் இருந்தது என்பதும் நாள்தோறும் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படும். பிரயா ணத்தில் பொழுது போவதற்காக இதை ஆதார மாக வைத்துப் பத்துப் பிரயாணிகள் சேர்ந்து கொண்டு, 1 முதல் 0 வரை ஒவ்வொருவரும் ஓர் எண்ணை 12 மணிக்கு முன்பே சொல்லி, அன்றைய பிரயாண மைல் தொகையின் கடைசிச் சிற்றிலக் கத்துக்கு (Digit) ஒவ்வொரு ரூபாய் பந்தயம் கட்டு வர். அன்று கப்பல் 589 மைல்கள் பிரயாணம் செய்த அறிவிக்கப்பட்டால், இத் தொகையின் கடைசிச் சிற்றிலக்கமாகிய 9 என்ற எண்ணைக் குறிப்பிட்டவர் 10 ரூபாய்களையும் பெறுவார்! தாக இக்கப்பல் லண்டனிலிருந்து அமெரிக்காவுக்குப் போய்த் திரும்பும் ஒவ்வொரு முறையிலும் 13,00,000 டாலர்களை இங்கிலாந்துக்குச் சேகரித்துத்தருகிறது.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/50
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை