பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் மிகப் பெரிய கப்பலாகிய குயின் எலிசபத்துக்கு அந் நாட்டு அரசியின் பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. கப்பல் கம்பெனி இக் கப்பல் குனுர்டு வயிட் ஸ்டார் என்னும் ஆங் கிலக் கப்பல் கம்பெனியாரைச் சேர்ந்தது.இங்கி லாந்தின் பெரிய கப்பல்களான குயின்மேரி, அக்விட் டேனியா, மாரடேனியா, கரோனியா, பிரிட்டானிக் வும் இப் புகழ் பெற்ற கம்பெனியைச் தவையே. இவற்றுள் குயின்மேரி கியன சேர்ந் 81,235 டன் நிறையும், மற்றக் கப்பல்கள் ஒவ்வொன்றும் 28,000 டன்னுக்கு மேற்பட்ட நிறையும் உடையவை. கப்புல் கட்டப்பட்ட வரலாறு இக் கப்பல் கட்டப்பட்ட வரலாற்றை அறிவ தும் இன்றியமையாததாகும்.7,000 ஒத்திகைகட் குப் பின், 2,000 சன்னல்கள் உள்ள இக் கப்பலின் அமைப்பு முடிவு செய்யப்பட்டது. இதன் மிகப் பெரிய உருவை முன்னிட்டு இக் கப்பலைக் கட்டிய ஜான் பிரவுன் கம்பெனியார் கப்பல் கட்டும் தளமாகிய கிளைடு என்னும் ஆற்றையே அகலப்படுத்தி ஆழமாக்கினார்களாம். 1986 டிசம்பரில் இக் கப்பல் கட்டும் வேலை தொடங்கிற்று. 1938 செப்டம்பர் 27-ல் மாட்சிமை தங்கிய எலிசபத் அரசியார் இக் கப்பலுக்குத் தம் பெயரிட்டு இதை மிதக்கவிட்டனர். போர்த்தொண்டு 1939-ல் போர் தொடங்கியதும், இக் கப்பலுந் தக்கபடி மாற்றி அமைக்கப்பட்டுப் போரில்தொண்டு