ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாசம் 51 நாட்டவர் வீட்டில் தங்கும் வாய்ப்பு, எனது உலகச் செலவிலேயே இந்நகரில் மட்டுமே கிடைத்தது. வொல்லர்மன் குடும்பத்தார் என்னைத் தம் விருந் தினராகப் பெற்றதைப்பற்றிப் பெருமைப்பட்டார் கள். இராசம்மாள் அவர்களின் மற்ற நண்பர்கட் கும் உவப்பளிப்பதற்காக, கோல குடும்பத்தா ரோடும் ஹௌ குடும்பத்தாரோடும் சிற்சில நாட்கள் தங்கினேன். அமெரிக்கரின் ஒழுக்கம் கடவுள் வழிபாடு செய்தபின்னரே இக் குடும் பத்தினர் உணவருந்தியது, அமெரிக்காவில் நான் எதிர்பாராததொன்று; மேலும், நான் தங்கிய இக் குடும்பங்களில் ஒன்றிலேனும்,ஒருவரும் குடிவகை சுளைப் பயன்படுத்தவில்லை. என்னால் அவர்கள் குடிக்காமலிருக்கிறார்களே என்று நான் வருத்தப் பட்டபோது, "நாங்கள் மட்டுமன்று; எங்களைப்போலவே, கிறிஸ்துமஸ் தவிர ஏனைய நாட்களில் குடிக்காத பல்லாயிரம் அமெரிக்கர் இருக்கிறார்க"ை என்று அவர்கள் கூறியது, வியத்தற் குரியதாயிருந்தது. நான் பாக்கியசாலி நான் போய்ச் சேர்ந்த நாள் மிகச் சிறப்பான காள்; அன்றுதான் ஓஹையோ - மிச்சிகன் மாகா ணங்களுக்குள் கால்பந்தாட்டப்போட்டி அந்நகரில் நடந்தது. அன்று நான் அங்கு வந்ததைப்பற்றி அன்பர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்; நான் பாக்கிய சாலி என்றுங் கூறினர். சில நாட்கள் முன்பே, எனக்காக 10 டாலர் (47)கொடுத்து ஒரு டிக்கட் டும் வாங்கி இருந்தனர்.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை