52 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் விளையாட்டுக் காட்சி பிற்பகல் 3 மணிக்கு அப் போட்டியைப் பார்க் கச் சென்றோம். அன்றுபோல் மிகுதியான குளிர் என்றும் இல்லை. பல உடைகளை அணிந்து கொண்டு நண்பர்களைத் திருப்தி செய்யவே நான் சென்றேன். பல்கலைக் கழக விளையாட்டிடத்தில் (Stadium) அப் போட்டி நிகழ்ந்தது. ஏறக்குறைய ஒரு நூறாயிரம் மக்கள் கூடியிருந்தனர். வானொலிக் காக அறிவிப்பு நடந்து கொண்டிருந்தது. பத் திரிகைகட்காகவும் உள்ளக் களிப்புக்காகவும் பலர் நிழற்படம் எடுத்தவண்ணமாயிருந்தனர்; தொலைக் காட்சிக் (Television கம்பெனியார் போட்டிக் காட்சியை அஞ்சல் செய்தனர். திரைப்படக்காரர் களும் சுறுசுறுப்பாயிருந்தனர். அமெரிக்கரின் கால்பந்தாட்டம் 'ரக்பி' எனப்படும். அதற்கும் பிற நாடுகளில் நடக்கும் கால்பந்தாட்டத்துக்கும் பல வேறுபாடுகள் உண்டு. இரண்டு சீனர்கள் ஓர் மெரிக்கக் கால்பந்தாட்டத்தைப் பார்த்தபின் னர், எந்தக்கட்சி வென்றது என்பதைப்பற்றி விவாதித்ததாக ஓர் அமெரிக்க வேடிக்கைப்பேச்சு இன்றும் வழக்கில் இருக்கிறது. காடி வணக்கம் நாட்டுக்கொடியை ஏற்றி நாட்டு வணக்கப் பாடலைப் பாடிய பின்மே போட்டி தொடங்கியது, சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. தம் நாட்டுக் கொடிக்கு அமெரிக்கர் மிகவும் வணக்கம் செலுத் துவர்; தெருவில் யாரேனும் ஒருவர் நாட்டுக் கொடி யைக் கொண்டுபோனால், அவ்வழியிற் செல்வோர் அனைவரும் தலை கு னிந்து, தொப்பிகளை
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை