பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் 53. எடுத்து வணக்கம் செலுத்துவது, நாம் பின்பற்றக் அமெரிக்கரின் கூடிய ஒன்று. சிறந்த பழக்கங்களுள் மாணவிகளின் உணவு விடுதி போட்டி முடிவுற்றதும், அருகிலிருந்த பேக்கர் ஹாலுக்குச் சென்றேன். (மாணவிகளின் உணவு விடுதி இருக்கும் அம்மண்டபத்தில், ஆண்டுக்கு நான்கு நாட்களில்தான் ஆடவர் உள்ளே செல்ல லாம். போட்டியை முன்னிட்டு அந்நாளும் இந்நாட் களில் ஒன்றாயிருந்தது அங்கே ஒவ்வொரு மாண விக்கும் டெலிபோன் இருந்தது; சுகாதார வசதிகள் சிறந்து விளங்கின; நீராடுவதற்கான அமைப்புக் களையுங் கருவிகளையுங்கண்டு பொறாமைப்பட்டேன். அமெரிக்கருக்கு நீராடும் அறையே சுவர்க்க லோகம். அவர்கள் நீராடும் அறையில்தான் குடி யிருப்பர் என்று விளையாட்டாகச் சொல்லுவதுண்டு. வீடுகட்டும் செலவில் ஒரு பெரும்பகுதியை நீராடும் அறைக்காகவே அமெரிக்கர் செலவிடுவர். பல வீடு. களில், வாழ்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டி லும், நீராடும் அறைகளின் எண்ணிக்கை மிகுதி யாக இருக்கும். கடவுள் வழிபாடு மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், நான் காம்பஸ் *க்குச் செல்லவில்லை. என்னை விருந் தினனாக ஏற்றிருந்த குடும்பத்தாருடன் நானும் கிறித்தவக் கோவிலுக்குச் சென்றேன். குழந்தை கடகான விவிலிய நூல் (Bible) வகுப்பில் ஆசி வேண்டுகோட்கிணங்க, ரியரின் வ 6. 7

  • பல்கலைக் கழகமும் அதைச் சேர்ந்த எல்லாக் கட்டிடச்

களும் உள்ள இடம் என்னும் பொருளில் காம்பஸ் என்ற சொல் அமெரிக்காவில் வழங்குகின்றது.