பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. ஏனைய நாடுகளைப்பற்றி அறிந்துகொள்ளுதல் மாணவருக்கும் மற்றையோருக்கும் இன்றியமையாதது என்பதும், இத் தகைய பிரயாண நூல்கள் தமிழில் மிகச் சிலவே உள்ளன என்பதும் தமிழ்மக்கள் நன்கு அறிவர். தமிழுலகம் இந் நூலைப் பெரிதும் ஆதரித்து, இத்துரையில் என்னை மேன் மேலும் ஊக்குமென்று நம்புகிறேன். இந்நூல் உருவாகும் வகையில் பேருதவி செய்த அன்பர் களுக்கு நன்றி செலுத்துங் கடப்பாடுடையேன். "எந்தைசோம சுந்தானார்க்(கு) யான் உரிமை ஆக்கிய இச் செந்தமிழ்நூல் வாழ்க சிறந்து. ராமச்சந்திரபுரம் 2650 இங்ஙனம், சோம.லெ.இலக்குமணச் செட்டியார்