பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் ஆண்டுச் சிறுவருக்கு நான் சில சொற்கள் கூறி னேன். அங்கிருந்து வயதுவந்த இளைஞர்கட்கான வழிபாட்டு மண்டபத்துக்குச் சென்றேன். மிஸ்டர் வொல்லர்மனின் மகன் ப்ரட்டி என்னை அறிமுகப் படுத்தியவுடன், அங்கும் ஒரு குட்டிச் சொற்பொழி வாற்றினேன். அதன்பின்னர் முதியோருக்கான வழிபாட்டு மண்டபத்துக்குச் சென்றேன். காந்தி யடிகளிடம் மிகவும் அன்புடைய ரெவரண்டு வொல்ட் கால விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட ஓஹையோ பல்கலைக் கழகக் கரட்சி என்ற ற மதகுரு. "காந்தியடிகளின் நாட்டிலிருந்து வந்திருப்பவர்" என்று என்னைப்பற்றித் தம் உரை யிற் குறிப்பிட்டார். வழிபாடு முடிந்தவுடன், மிகப் பலர் என்னிடம்வந்து என் நலத்தை விசாரித்தனர்.