இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் 55 நாகரிகமாய் உண்ணவும் உடுக்கவும் உறங்க வும் ஆடவும் ஓடவும் பாடவும் புலனார இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கவும், இவற்றிற்கெல்லாம் இன்றியமையாத செல்வத்தை மேன் மேலும் வளர்க்கவும் பொழுது போதாத அமெரிக்கருக்குக் கண்ணுக்கெட்டாத ஒரு கடவுளைப் பற்றிச் சிந் திக்கவும் நேரமிருக்கிறது என்பதை அன்றுதான் நான் அறிந்தேன். ஓஹையோ பல்கலைக் கழகம் திங்கட் கிழமையன்று, ரோட்டரி கிளப்பில் நடந்த பகலுணவுக் (Lunch) கூட்டத்தில் சர்வ தேசவிருந்தினன் (International Guest of Honour} யான் சிறப்பிக்கப்பட்ட பின், காம்பஸ் ஆக பார்வையை அன்று தொடங்கினேன். . வைத்தியக் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி ஓஹையோ பல்கலைக் கழகம் 1400 ஏக்கர் பரப்பில் 68 கட்டிடங்களுடன், ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் புகழ் பெற்ற பல பேரறிஞர்கள் உள்பட 2600