பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் போலவே இங்கேயும் போரில் தொண்டாற்றிய பல்லாயிரவர் மாணவராயுள்ளனர். துணைத் தலைவர் சந்திப்பு காம்பசில், என் முதல் அலுவல், பல்கலைக் கழகத் துணைத் தலைவராகிய டாக்டர் ப்ளாண்டு ஸ்ட்ராட்லியைச் சந்தித்ததேயாகும். அவர் இந்தியா வைப் பற்றியும் இந்தியாவிலுள்ள கல்வி முறை யைப் பற்றியும் என்னிடம் விரிவாகக் கேட்டார்; தம் பல்கலைக் கழகத்தைப் பற்றிய விவரங்களையும் விளக்கிக் கூறினார் ; இல்வாழ்க்கைக் கலை, கால் நடைப் பாதுகாப்பு, விவசாயப் பொறியியற் கலை போன்ற துறைகளில்தான் ஓஹையோ பல்கலைக் கழகம் பெரிதும் முன்னேறியிருப்பதாகக் கூறினார். தாம் ஒரு விவசாயி என்றும், அன்று காலையிற் கூட வயலில் வேலை செய்ததாகவும் அவர் கூறி யது, எனக்குப் பெரு வியப்பளித்தது. தகுதியுள்ள இந்திய இளைஞர்கள் தம் பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டுமென்றும், அவர்கட்கு எல்லா உதவிகளும் அளிப்பதாகவும் அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வந்த மாணவரிற் பலருக்கு ஆங்கில மொழிப்பயிற்சி போதிய அள வுக்கு இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அவரோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது, பல் கலைக்கழகப் புகைப்படப் பகுதியினர் படமெடுத்த னர்; எங்கள் சந்திப்பு மறுநாள் பத்திரிகையில் வெளியாயிற்று.