59 ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் தனியே அவர்களோடு விவாதித்தேன். சிலர் தாம் இயற்றிய நூல்களை அன்பளிப்பாய்த் தந்த னர்; அமெரிக்கப் பொருளாதாரத்தை நன்கு அறிய எனக்கு உதவக்கூடிய நூல்களின் பட்டிய லுந் தந்தனர். வானொலிக் கல்வித்துறைத் தலைவர் சந்திப்பு பின்னர் பல்கலைக்கழக வானொலி நிலையத்தில், வானொலிக் கல்வித்துறைத் தலைவர் டாக்டர் கீத் டைலர் வானொலி நிகழ்ச்சியில் என்னைப் பேட்டி கண்டார். இந்தியாவைப் பற்றிய பல வினாக்களுக்கு வானொலி நிலையம் விடை கூறினேன். இந்தியா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் ஏற்றுமதிகளும் ஒன்றுக்கொன்று போட்டியில்லாதவையா யிருப்பதால், பொருளா தாரத் துறையில் இந் நாடுகள் ஒத்துழைப்பது எளிதென்பதையும், இந்தியா மீது அமெரிக்கர் நல்லெண்ணமுடையவரா யிருப்பதையும், டாக்டர் டைலர் பேட்டியின் இறுதியில் குறிப்பிட்டார். நூல் நிலையம் நூல் நிலையத்திலும் சிறிதுநேரம் செலவிட்டேன். அமெரிக்கப்பல்கலைக்கழகங்களில் நூல்நிலையம்மிகச் 885
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/65
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை