ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் 65 முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்நாளில் கிறித்தவ ஆலயங்களில் சிறப்பான வழிபாடுகள் நிகழ்கின்றன.அந்நாளில், அமெரிக்கர் அந்நாட்டு உணவாகிய வான்கோழி இறைச்சியை (14 பவுண்டு எடையுள்ள இது அமெரிக்க நாட்டின் சிறப்பான பறவை ) நாம் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல் உண்பதுபோல் உண்பர். விவசாயப் பண்ணை வெள்ளிக்கிழமையன்று, 1,000 ஏக்கர் நிலப்பரப்பும் இக்காலத்துக்குரிய கட்டிடங்களுமுள்ள பல்கலைக் கழகத்து விவசாயப் பண்ணையைப் பார்வையிட் டேன். அது மிகச் சுகாதாரமான நிலையில் பேணப் பட்டு வருகிறது. அங்கே தேனீக்கூடுகளையும் கோழிப்பண்ணைகளையும், மாட்டுப்பண்ணைகளையும், காய்கறிகள், உப உணவுப்பொருள்கள், பூ ஆகிய வைகளின் உற்பத்தி பற்றிய கழகத்தையும் (Horti- culture Institute) பார்த்தேன். தாவரங்களும் விலங்குகளும் பற்றிய ஆராய்ச்சிக்காக 70 மைல் நீளமுள்ள ஏரியும் அங்கே இருக்கிறது. விமான நிலையம் முதலியன பல் பல்கலைக் கழகத்து ஆகாயவிமான நிலையம், விவசாயப்பண்ணைக்கு அணித்தாயுள்ளது. அதன் நிலப்பரப்பு 400 ஏக்கர். ஓஹையோவில்தான் ஆகாயவிமானம் கண்டுபிடிக்கப்பட்டதென்பதை யும் நாம் நினைவுபடுத்திக்கொள்ளுதல் நலம். கலைக்கழக ஆய்வுக்கூடத்தையும் (Observatory), பொருட்காட்சிச் சாலையையும் பார்வையிட்டபின், பாகல்டி கிளப் (Faculty Club) பில் ஒய்.எம்.சி.ஏ. நண்பர்கள் சிலருடன் பகலுணவு அருந்தினேன்.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/71
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை