66 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் நம் நாட்டு உணவு அன்றிரவு டாக்டர் மக்ளின் வீட்டில்,பல நண் பர்களுடன் மீண்டும் நம் நாட்டு உணவு அருந்தும் பேறு கிடைத்தது. நம் உணவின் சுவையை யாவரும் பாராட்டினர்; காரம் அதிகமா யிருப்ப தாயும், எண்ணெய் சேர்ப்பதால் சீரணிப்ப தில்லை என்றும் நம் உணவைப்பற்றி இருகுறைகள் வெளிநாட்டார் கூறுவர். பிரிவுபசாரம் சனிக்கிழமையன்று, ஹௌ குடும்பத்தார்கொலம் பஸ் நகரம் முழுவதையும் எனக்குக் காட்டினர். மீண்டும் தம் இல்லத்துக்கு நான் வரும் நன்னாளை எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர்களின் வேண்டு கோளுக்கு இசைவு தெரிவித்து, அவர்களில்லத்தி லிருந்து விடைபெற்று, ரயிலுக்குச் செல்லும் வழி யில் தத்துவப் பேராசிரியர் ஏவ் என்பாரின் இல்லத் துக்குவந்தோம். அங்கே, எனக்கு ஒரு சாய் ஓ நாரோ? நடந்தது. அன்று அன்று விருந்துண்ட முப்பதின்மரிற் பெரும்பாலோர் இந்திய மாணவரே. தொழிற்சாலை களின் ஊதியத்தில் தொழிலாளரு க கு பங்குகொடுப்பதுபற்றி நடந்த விவாதத்தில், நானும் சில வார்த்தைகள் கூறிவிட்டு, வெளிநாடுகளிற் கல்விபயிலும் இந்திய மாணவரிடமிருந்து இந்தியா பெரிதும் எதிர்பார்ப்பதையும், அவர்கள் இந்தியா வின் நற்பெயரைக் காப்பாற்றவேண்டும் என்பதையு ம் எடுத்துச் சொன்னேன். தாம் அனைவரும் நன்றாக நடத்தப் படுவதா கவும், பிறருடன் எளிமையாகப் பழகும்
ப் சாய் ஓ நாரோ-என்பதற்கு ஜப்பானிய மொழியில், பிரிவுபசாரவிருந்து என்பது பொருள்.