ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம 67 இயல்புடையவர்களுக்கு அமெரிக்க மக்கள் தனித் தனியே பற்பல உதவிகள் செய்து வருவதாகவும் அம் மாணவர்கள் வாயிலாக அறிந்து மகிழ்ந்தேன். முடிவுரை சில நிமிடங்களில் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன்; என் வாழ்நாளிலேயே மிகவும் சுறு சுறுப்பான வாரமும் முடிந்துவிட்டது. நான் நியூ யார்க்கில் விட்டுவந்த வேலைகளைத் தொடர்ந்து செய்ய அந்நகருக்குத் திரும்பலானேன். ஆனாலும், அப் பல்கலைக் கழகமும், அங்கே எனக்குக் கிடைத்த புதிய நண்பர் குழாமும் இன்னும் என் மனத்தைவிட்டு அகலவில்லை. பல கூட்டங்களைப்பற்றி யான் ஈண்டுவிரித்துக் கூறி யிருப்பது வியப்பாயிருக்கலாம். அமெரிக்கர் களைப் போலக் கூட்டப்பித்து உடையவர் உலகில் வேறெங்கும் இல்லை. எந்தச் சிறு செயலுக்கும் ஒரு கூட்டம் நடத்துவதும், ஒரு செயல்குழு அமைப்ப தும் அ மெரிக்கரின் வியத்தகு பண்புகளுள் ஒன்று.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/73
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை