6. ஹோனலூலூ நினைவுகள் ஹோனலூலூவின் துறைமுகமான பெர்ல் ஹார் பரில் குண்டு வீசி, 1941 டிசம்பர் 7-ல் ஜப்பான் போர் தொடுத்தது, இந்நிகழ்ச்சியின் ஏழாம் ஆண்டு நிறைவு நாளன்று அமெரிக்காவிலிருந்து ஆஸ்தி ரேலியாவுக்குச் செல்லும் வழியில் ஹாவாய்த் தீவுகளின் தலைநகரான ஹோனலூலூவில் தங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையிலுள்ள சான் பிரான்ஸிஸ்கோ நகரத்திலிருந்து 2400 மைல்கள் மேற்கேயுள்ள எரிமலையால் உண்டான தீவுக் கூட்டங்கட்கு ஹாவாய்த் தீவுகள் என்று பெயர். வற்றுள், முதன்மையான தீவின் பெயரும் ஹாவாய் என்பதே யாகும். ஹாவாய் பசிபிக் பெருங் கடலின் நடுவிடத்தில் இருப்பதால், இப்பெருங் கடலைப்பற்றிச் சிறிது அறிந்துகொள்ளுவோம். பசிபிக் பெருங்கடல் உருவிலும் பரப்பிலும் ஏழு பெருங்கடல்களி லும் பெரியது பசிபிக் பெருங்கடலேயாகும். அது பிற பெருங்கடல்களிலுள்ள எல்லாத் தீவுகளைக் காட்டிலும் மிகுதியான எண்ணிக்கையுள்ள தீவுகளை உடையது. அத்தீவுகளில் குச்சிபோல் நிற்கும் தலைமயிருடைய பிசியர்கள் (Fiji), சப் பட்டை மூக்குடைய நியூ கலிடோனியர்கள் முதலாய் பலதிறப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். குடி யேற்ற நாடுகள், பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் !
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/74
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை