170 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் இருப்பது ஹோனலூலூவாகும்.மேலும், பசிபிக் தீவுகளிலேயே, ஹாவாய்தான் மிகவும் அழகானது. ஆகவே, ஹாவாயின் தலைநகருக்கு, பசிபிக்கின் முச்சந்தி (Cross - roads of the Pacific), பசிபிக்கின் பூலோக சுவர்க்கம் (Paradise of the Pacific) என்னும் பெயர்கள் வழங்குகின் றன. அழகு நிறைந்த பூமி அருமையான சோலைகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட வகைவகையான பூக்களும் அற்புதமான தோட்டங்களும் உள்ள ஹோனலூலூ எழில் மிக்க காட்சிகள் கொண்டது. தேங்காயும் தென்னந் தோப்பும் தெருவெல்லாம் உள்ளன. உல்லாசப் பிரயாணம் செய்பவர்களின் பொழுதுபோக்குக்கு இஃது ஏற்ற இடமாகும்;புகைப்படம் எடுப்பவர் கட்கு ஓய்வே இல்லாமற் செய்யும் இடமும் இதுவே யாகும். ஆண்டுதோறும் 30,000 அமெரிக்கர்கள் இத்தீவுக்கு உல்லாசப் பயணமாக வருகின்றனர். உயரமான மலைகளும், பசுமையான சமவெளிகளு முள்ள தீவு ஓய்வுக்கும் அமைதிக்கும் தகுந்த இட மாகும். சில பகுதிகள், தோற்றத்தில் ஈழநாட்டைப் போலவே இருக்கின்றன. உலகிலேயே அழகிய கடற்கரை ஹோனலூலூவின் நான்கு மைல் நீளமுள்ள கடற்கரைக்கு வைக்கிக்கி பீச் என்று பெயர். உலகி லேயே சிறந்த கடற்கரை இதுவேயாகும். அங்கு ராடியவர்களைக் கண்டவுடன், எனக்கு வியப்பும் நீராட வேண்டும் என்னும் அவாவும் உண்டாயின. வைக்கிக்கி கடற்கரையைப் பற்றிய இதிகாசங்களும் புராணங்களும் பாடல்
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/76
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை