ஹோனலூ நினைவுகள் 78 நேரம் என்றால் குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் ஒரு மணி நேரம் தாழ்த்துத்தான் நிகழ்ச்சிகள் தொடங்கப்படும் என்று பொருள்படும். பேபி லூ அவாவ் என்ற ஒருவிழா முதற்குழந்தைக்கு நடத்தப் படுகிறது. இது நாட்டுக்கோட்டை நகரத்தாரின் அதுமை விழாவை ஒத்தது. இவ்விழாவில், விருந்தினர் பத்து ரூபாய் மொய்ப்பணம் கொடுக்க வேண்டும். மற்றக் காலங்களில், கத்தி, கரண்டி, குத்துமுள் (fork) போன்ற கருவிகளின் உதவியால் உணவு அருந்தினாலும் பேபிலுஅவாவில் மட்டும் கையால்தான் உணவருந்த வேண்டும். . இந்துக்களைப் போலவே ஹாவாயர்களும் பல கடவுளரை வழிபடுதலில் நம்பிக்கை உடையவர்கள்; எரிமலைக்கடவுளும் இவர்கள் வணங்கும் தெய்வங் களுள் ஒன்றாகும். அவர்கள் இயற்கையையும் தெய்வ மாகப் போற்றுவர்; சூரிய வணக்கமும் செய்வர். ஹாவாயர்கள் பழங்கால மூடநம்பிக்கைகளும் பழைய பழக்க வழக்கங்களும் நிரம்பஉடையவர்கள். 'லெய்' என்ற பூமாலைகளை ஹாவாயர்கள் வெளி நாட்டவருக்குப் போடுவர். தீவுகளை விட்டுக் செல் லும்போது அவைகளின் அவைகளின் எல்லையைத் தாண்டிய வெளிநாட்டவர் இம் மாலைகளைக் கடலில் போட்டுவிடவேண்டும். நீரோட்டத்தால் அந்தமாலை கள் மீண்டும் கரையை அடைந்தால், அதை அணிந் தவர்கள் மறுபடியும் ஹாவாய்த் தீவுகட்கு வருவார் கள் என்று ஹாவாயர்கள் நம்புகிறார்கள். வுடன் ஹாவாயர்கள் சாபத்தில் நம்பிக்கை உடைய வர்கள். சாபமிடுதலுக்கு ஹாவாய் மொழியில் கௌனா கெளனா' என்று பெயர். .
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை