76 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் மாகாணங்களுடன் ஹாவாய் இன்னும் ஒத்த நிலையை யடையவில்லை; மாற்றாந்தாய்க் குழந்தை போலவே அப்போது இருக்கிறது. அமெரிக்கா வின் 49வது மாகாணமாக இதைச் சேர்ப்பதற்குச் சட்ட திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இத் தீவுகள் ஹாவாய்ப் பிரதேசம் (Territory Hawai) என்ற பெயரால் அரசியல் உலகில் அழைக்கப்படுகின்றன. குடியேற்ற நாடு என்ற பிரிட்டிஷ் பெயரும், பிரதேசம் என்ற அமெரிக்கப் பெயரும் ஒன்றேயாம். of இப்போது ஹாவாயில் வாழ்பவர்களில், மூன் றில் இருபங்கினர் அமெரிக்க மக்களின் உரிமை யைப் (American Citizenship) பெற்றுக்கொண்டு விட்டனர். ஹாவாயின் வாணிகம் முழுவதும் அமெ ரிக்காவோடுதான் நடைபெறுகிறது. ஹாவாயின் பொருளாதார நிலையைத் தங்கள் ஆதிக்கத்திற்குள் வைத்திருப்பவர்களும் ஐந்து அமெரிக்கரே யாவர். ஹாவாயில் கரும்பு ஆலைகளும்,எல்லா விளை பொருள்களும், தோட்டங்களும் இவர்களைச் சேர்ந் தனவே. ஹாவாயின் நாணயமும் அமெரிக்க நாணய மேயாகும். இன்று அமெரிக்காவின் மேற்கு எல்லையாக ஹோனலூலூ இருக்கிறது. பிரிட்டிஷ் பேரரசுக் குச் சிங்கப்பூர் எவ்வளவு சிறந்த இடமாக இருக் கிறதோ, அவ்வளவு சிறந்த இடமாக அமெரிக்கா வின் தற்காப்புக்கு ஹோனலூலூ இருக்கிறது. "அலோ ஓ நோ ஹோ ஏ ஐக்கி இயா ஹாவாய்" என் பது ஹாவாயில் வழங்கும் ஒரு பழமொழியாகும். 'ஹாவாய்த் தீவுகளைப் பார்க்காதவரையில் உங்கள் வாழ்வு வீண்தான்!" என்பது இதன் பொருள்.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை