பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுக்கள் 79 ஒரு பொது நீதிபதிக்குக் கட்டுப்பட்டு நடப்பது, தலைவருக்குக் (Captain) கீழ்ப்படிவது, தம் பகுதி யைச் சேர்ந்த பலரோடு இணைந்து ஒற்றுமையா விருப்பது, இறுதியில் போட்டியில் வெற்றி பெற்று லும் பெறாவிட்டாலும் எதிரிகளையும் நண்பர்களாகக் கொள்ளுவது ஆகிய பழக்கங்களும் விளையாட்டுக் கள் வாயிலாக உண்டாகின்றன. இப்பழக்கங்கள் பரவ வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் 'ஒலிம் பிக்' போன்ற போட்டிகள் பல நாடுகளுக்கிடையே பெருஞ் செலவில் நடத்தப்படுகின்றன. விளையாட்டுக்களின் சிறப்பு பிற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் விளையாட்டுக்களுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. இந்த நாட்டுப் பத்திரிகை களின் தலைப்புச் செய்திகள் போட்டி முடிவுகள் அல்லது ஒருபுகழ்பெற்ற ஆட்டக்காரருக்கு நேர்ந்த சிறு விபத்து முதலியவற்றைப்பற்றியே இருக்கும். மகாத்மா காந்தியடிகளின் மறைவு, அமெரிக்கத் தலைவர் தேர்தல், போர்முடிவு, மன்னரின் ஆஸ்தி ரேலியப் பயணம் கைவிடப்பட்டது என்ற நிகழ்ச்சி கள்தான் இவ்விதிக்கு விலக்கானவையாகும். அமெரிக்காவில் விளையாட்டிடங்கள்* அமெரிக்காவில், அட்லாண்டிக்கடற்கரைமுதல் பசி பிக் கடற்கரைவரையும், கனடாநாட்டு எல்லை முதல் ஸ்டேடியம் என்னும் பொருளிலேயே, விளையாட்டிடம் என்ற சொல்லை இக்கட்டுரையில் வருமிடங்களிலெல்லாம் கொள்ளவேண்டும்.