பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுக்கள். 87 சீட்டு வாங்கச் சென்ற என் அமெரிக்க வணிக நண் பர் ஒருவர், விளையாட்டிடத்தில் அமருவதற்கான குறிப்புக்கள் அடங்கிய விளக்கமான படங்களுட னும், ஆட்டத்தைப் பற்றிய சட்ட திட்டங்கள், ஆட் டக்காரர்களின் படங்கள், வரலாறுகள், அடையா ளங்கள், நீதிபதி (Umpire) பலவிதமாகக் கை காட்டு வது, விசில் ஊதுவது இவற்றின் பொருள்களெல் லாம் அடங்கிய புத்தகங்களோடும் திரும்பி வந்தார். இரவு 8 மணிக்குச் சிறிது முன்பு உள்ளே சென் றோம். அப்போது ஏறத்தாழ ஐம்பதாயிரம் பார்வை யாளர் அங்கே வீற்றிருந்தனர். நாட்டு வணக்கப் பாடலும் சில அறிவிப்புக்களும் நடந்தவுடன் ஆட் டம் தொடங்கிற்று. புகைப்படக்காரர்கள் படம் பிடித்தவண்ணமா யிருந்தனர். வானொலி நிருபர் களின் அறிவிப்பும் தொடங்கிற்று.தொலைக்காட்சி (Television ) ஒலிபரப்பும் நடந்தது. திரைப்படங் களும் எடுக்கப்பட்டன. இத்தனை ஆரவாரங்களுக்கு மிடையே பார்வையாளர் கட்டுப்பாடாக இருந்தது பாராட்டுக்குரியது. அமெரிக்கரின் பல வகை விளையாட்டுக்கள் அமெரிக்கரின் மற்ற விளையாட்டுக்கள் - மோட் டார்ப் போட்டிகள், மோட்டார் சைக்கிள் போட்டி கள், ஆகாய விமானப் போட்டிகள், பெருங்கடல் களிலும் ஏரிகளிலும் மீன் பிடித்தல், படகு ஓட்டு தல், அம்பு எய்தல், வில் எறிதல், வாள் போர், மற்போர், கண்ணைக் கட்டிக் கொண்டு கால் பந்தா டுதல் ( Blind Foodball ), பனிக் கட்டியின் மீது ஓடுதல் முதலியனவாம். துப்பாக்கியால்